ஆ : சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
கனவுகள் பொங்குது எதிலே அல்ல
வழிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை தேடியே
பெ : உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ
உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை இந்த
பயணம் இந்த வாழ்கை ஆனதோ
ஆ : கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை தேடியே
ஆ : ஓ நதியே நீ எங்கே என்று கரைகள் தேட கூடாதா
நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேட கூடாதா
பெ : ஓ மழை இரவினில் குயிலின் கீதம் துடிப்பதை யார் அறிவார்
கடல் மடியினில் கிடக்கும் பலரின் கனவுகள் யார் அறிவார்
ஆ : அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால் அன்பே நீ அங்கிருகிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய் உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்
பெ : அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே ?
பூவின் உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே காற்றின் வெளியே இல்லையே ..
உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே ..
ஆ : ஓ ..எனக்கே நான் சுமையாய் மாறி என்னை சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழலாய் மாறி உன்னை தேடி வந்தேனே
பெ : விழி நனைந்திடும் நேரம் பார்த்து இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் உன்னை எந்தன் உயிர் ஒதுக்கி விடாது
ஆ : உலகம் ஓர் புள்ளி ஆகுதே ,நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே ,சுகமோ வலியோ எல்லை மீறுதே
ஆ : சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க
மறு இமை மாத்திரம் வழியில் நோக
இடையினில் எப்படி கனவும் காணுமோ
பெ : உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம் கொஞ்ச நேரம்
கூட என்னால் ஆகுமோ?
உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்கை ஆனதோ!
படம் : சர்வம் (2009)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : பா.விஜய்.
பாடகர்கள் : ஜாவேத் அலி,மதுஸ்ரீ
M : Siragugal Vanthathu Yengo Sella
Iravugal Theerthathu Kannil Mella
Ninaivugal Yenguthu Unnai Kaanave
Kanavugal Ponguthu Yethele Alla
Valigalum Serdhathu Ulle Killa
Sugangalum Kooduthu Unnai Theydiye
F :Unnai Unnai Thaandi Sella
Konja Kaalam Konja Thooram
Konja Neram Kooda Yennal Aagumo
Unnai Unnai Thedi Thaane
Intha Yaekam Intha Paathai Intha
Payanam Intha Vazhkai Aanatho
M : Kanavugal Ponguthu Yethele Alla
Valigalum Serdhathu Ulle Kella
Sugangalum Kooduthu Unnai Theydiye
M : Oh Nadhiye Nee Yengae Endru Karaikal Theda Koodaatha
Nilave Nee Yengae Endru Mugilgal Theda Koodaathaa
F : Oh Mazhai Iravinil Kuyilin Geetham Thudipathai Yaar Arivaar
Kadal madiyinil Kidakkum Palarin Kanavugal Yaar Arivar
M : Azhage Nee Yengirukkiraai Valithaal Anbe Nee Angirukiraai
Uyire Nee Yenna Seikiraai Uyirin Ulle Vanthu Selkiraai
F : Anbe Yenthan Nenjam Yenge ?
Poovin Ulle Nilavin Mele
Theeyin Keezhe Kattrin Veliye Illaiye..
Unthan Kannil Unthan Moochil
Unthan Iravil Unthan Nenjil
Unthan Kaiyil Unthan Uyiril Ullathe ..
M : Oh..enakke Naan Sumaiyaai Maari Yennai Sumanthu Vanthene
Unakke Naan Nizhalai Maari Unnai Thedi Vanthene
F : Vizhi Nanainthidum Neram Paarthu Imai Vilagi Vidaathu
Uyir Thudithidum Unnai Yenthan Uyir Othukki Vidaathu
M : Ulagam Oar Pulli aaguthey,Nenjam Yengo Mithanthu Poguthey
Uyiril Oru Poo Vedikkuthey,Sugamo Valiyo Ellai Meeruthey
M : Siragugal Vanthathu Yengo Sella
Iravugal Theerthathu Kannil Mella
Ninaivugal Yenguthu Unnai Kaanave
Oru Imai Yengilum Thenil Moozhga
Maru Imai Maathiram Valiyil Noga
Idaiyinil Yeppadi Kanavum Kaanumo
F : Unnai Unnai Thaandi Sella
Konja Kaalam Konja Thooram Konja Neram
Kooda Yennal Aagumo?
Unnai Unnai Thedi Thaane
Intha Yaekam Intha Paathai Intha Payanam
Intha Vaazhkai Aanatho!
Film : Sarvam (2009)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : P.Vijay
Singers : Javed Ali,Madhushree
No comments:
Plz Leave a Comment dude