பெ : சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
குழு : நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் சொல்லு பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி
பெ : சொல்லாமலே யார் பார்த்தது
ஆ : மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
பெ : நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
ஆ : கண்ணே உன் முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
பெ : அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மட்டும் பொன்வீணை எந்தன் இடையா
ஆ : இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
பெ : சொல்லாமலே யார் பார்த்தது
பெ : கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
ஆ : என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
பெ : அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
புள் மீது பூவானேன் தேகம் இளைத்து
ஆ : வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
பெ : உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளு கண்மணி
பெ : சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
பெ : சொல்லாமலே யார் பார்த்தது
படம் : பூவே உனக்காக (1996)
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
வரிகள் : கவிஞர் வாலி
பாடகர்கள் : ஜெயசந்திரன்,சித்ரா
F : Sollamale Yaar Parthathu
Nenjodu Thaan Poo Poothathu
Mazhai Sudugindrathe Adi Athu Kadhala
Thee Kulugindrathe Adi Ithu Kadhala
Intha Mattrangal Unnale Uruvaanatha
Chorus : Nenjaththai Thottu Thottu Kadhal Sollum Pachaikkili
Muththangal Enna Saththam Mella Vanthu Solluthadi
F : Sollamale Yaar Parthathu
M : Malligai Poo Vaasam Ennai Killugindrathu
Adi Panju Methai Mullai Pola Kuthugindrathu
F : Nenjukkulle Raattinangal Suthugindrathu
Kangal Thookam Kettu Mattalangal Kottugindrathu
M : Kanne Un Mundhanai Kadhal Valaiya
Un Paarvai Kuttrala Chaaral Mazhaiya
F : Anbe Un Raajangam Enthan Madiya
Nee Meettum Pon Veenai Enthan Idaiya
M : Idhayam Nazhuvuthadi
Uyirum Karaiyuthadi Unnodu Than
Chorus : Nenjukkul Oduthadi Chinna Chinna Minnal Vedi
Panchukkul Theeyaipol Pattrikolla Kanmani
F : Sollamale Yaar Parthathu
F : Kankkulle Untham Mugam Otti Kondathu
Suga Soppanangal Ennai Vanthu Suttri Kondathu
M : Ennai Vittu Thendral Konjam Thalli Chendrathu
Naan Un Perai Sonna Pothu Alli Kondathu
F : Anbe Naan Ennaalum Unnai Ninaithu
Pull Meedu Poovanin Thegamizhaithu
M : Villodu Ambaaga Ennai Inaithu
Sollatha Santhosa Yutham Nadathu
F : Ulaga Athisayathil Ondru Koodiyathu Nam Kadhala?
Nenjukkul Oduthadi Chinna Chinna Minnal Vedi
Panchukkul Theeyaipol Pattrikolla Kanmani
F : Sollamale Yaar Parthathu
Nenjodu Thaan Poo Poothathu
Mazhai Sudugindrathe Adi Athu Kadhala
Thee Kulugindrathe Adi Ithu Kadhala
Intha Mattrangal Unnale Uruvaanatha
Sollamale Yaar Parthathu
F : Sollamale Yaar Parthathu
Film : Poove Unakkaga (1996)
Composer : S. A. Rajkumar
Lyrics : Vaali
Singers : P.Jayachandran, Chitra
No comments:
Plz Leave a Comment dude