Sunday, 27 October 2013

Idhaya Vaanin Udhaya Nilave-Parthiban Kanavu (1950)


பெ : இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?
ஒளியிலாத உலகம் போல
உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே

கண்கள் செய்த பாபம் உன்னை
கண்டும் காணாதேங்குதே கண்டும் காணாதேங்குதே
பாய்விரித்துக் கப்பல் செல்ல
பாவி நெஞ்சம் துடிக்குதே பாவி நெஞ்சம் துடிக்குதே

இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?

ஆ : இருளகற்றும் ஒளியென்றென்னை
எண்ணும் நீ யாரோ? எண்ணும் நீ யாரோ?
இருளகற்றும் ஒளியென்றென்னை
எண்ணும் நீ யாரோ? எண்ணும் நீ யாரோ?
கண்டும் காணாதேங்கும் கண்கள்
காதல் கண்களோ? காதல் கண்களோ?

இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறேன் நான் எங்கே போகிறேன்

பெ : ஆசை நெஞ்சின் நேசக் கரங்கள்
அணைக்க உன்னை நீளுதே அணைக்க உன்னை நீளுதே
பறந்து வந்து உன்னைத் தழுவ
பறந்து வந்து உன்னைத் தழுவ
பாழும் சிறகு இல்லையே பாழும் சிறகு இல்லையே

இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?

படம்: பார்த்திபன் கனவு (1950)
இசை: வேத்பால் வர்மா
வரிகள் : விந்தன்
பாடகர்கள் : பி.சுசீலா, ஏ.எம். ராஜா

F : Idhaya Vaanin Udhaya Nilave
Enge Pokiraai Nee Enge Pokiraai?
Oliyilaadha Ulakam Pola 
Ullam Iruludhe En Ullam Iruludhe

Kankal Seydha Paapam Unnai
Kandum Kaanaadhengudhe Kandum Kaanaadhengudhe
Paaiviriththuk Kappal Sella
Paavi Nenjam Thutikkudhe Paavi Nenjam Thutikkudhe

Idhaya Vaanin Udhaya Nilave
Enge Pokiraai Nee Enge Pokiraai?

M : Irulakatrum Oliyendrennai
Ennum Nee Yaaro? Ennum Nee Yaaro?
Irulakatrum Oliyendrennai
Ennum Nee Yaaro? Ennum Nee Yaaro?
Kandum Kaanaadhengum Kankal
Kaadhal Kankalo? Kaadhal Kankalo?

Idhaya Vaanin Udhaya Nilave
Enge Pokiren Naan Enge Pokiren

F : Aasai Nenjin Nesak Karangal 
Anaikka Unnai Neeludhe Anaikka Unnai Neeludhe
Parandhu Vandhu Unnaith Thazhuva
Parandhu Vandhu Unnaith Thazhuva
Paazhum Siraku Illaiye Paazhum Siraku Illaiye

Idhaya Vaanin Udhaya Nilave
Enge Pokiraai Nee Enge Pokiraai?

Film : Parthiban Kanavu (1950)
Composer : Vedpal Varma 
Lyrics : Vindhan 
Singers : P. Suseela, A.M. Raja

No comments:

Plz Leave a Comment dude