ஆ : இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
பெ : இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
ஆ : பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பெ : பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
ஆ : பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பெ : தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்
ஆ&பெ : இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
ஆ : தலையை விரித்துத் தென்னை
போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
பெ : இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
ஆ&பெ : இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
ஆ : மலையைத் தழுவிக் கொள்ளும்
நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சம் ஒன்று போடலாமே
பெ : தலையைத் தடவிச் செல்லும்
காற்றோட்டமே
காலை மறைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டு பேசலாமே
ஆ&பெ : இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல ஹ ஹ ஹ…
படம் : சாந்தி நிலையம் (1969)
இசை : MS விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,P சுசீலா
M : Iyarkai Enum Ilaya Kanni
Aengugiraal Thunaiai Enni
F : Iyarkai Enum Ilaya Kanni
Aengugiraal Thunaiai Enni
M : Ponnirathu Mellidaiyil Poovaada
F : Pottu Vaitha Vanna Mugam Neeraada
M : Ponnirathu Mellidaiyil Poovaada
Pottu Vaitha Vanna Mugam Neeraada
F : Thaamaraiyaalane Sirithaal
Thalaivanuko Thoodhu Vittaal
M&F : Iyarkai Enum Ilaya Kanni
Aengugiraal Thunaiai Enni
M : Thalaiai Virithu Thennai Poraadudho
Edhanai Ninaithu Ilai Neeradudho
Kanni Unnai Kandadhaalo
Thannai Enni Kondadhaalo
F : Ilaigal Marathukenna Maellaadaiyo
Idaiyilmaraithuk Kattum Noolaadaiyo
Kattik Konda Kalvan Yaro
Kalvanukum Enna Pero
M&F : Iyarkai Enum Ilaya Kanni
Aengugiraal Thunaiai Enni
M : Malaiyai Thaluvi Kollum Neerotame
Kalaigal Pazhaga Solla Therottamae
Manjal Veyil Neram Thaane
Manjam Ondru Podalaamae
F : Thalaiyai Thadavi Sellum Kaatrottamae
Kaalai Maraithu Sellum Aattrotamae
Innum Konjam Neram Thaane
Anthi Pattu Pesalaamae
M&F : Iyarkai Enum Ilaya Kanni
Aengugiraal Thunaiai Enni
Ha Ha Ha Lalala L Lalala Ha Ha Ha
Film : Shanthi Nilayam (1969)
Composer : M.S.Vishwanathan
Lyrics : Kannadasan
Singers : S.P.Balasubramaniam,P.Susheela
I need BGM with female voice. pls pass it to vmnanda@gmail.com
ReplyDeleteI like to sing this song with some female do any one interested....pls contact vmnanda@gmail.com
ReplyDelete