Sunday, 25 May 2014

Iravaa Pagala-Poovellam Kettuppaar

Irava Pagala Surya Jothika Poovellam Kettupaar

ஆ : இரவா பகலா, குளிரா வெயிலா, என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா, இடியா மழையா, என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ  செய்யுதடி
என்னை ஏதோ  செய்யுதடி ,

காதல் இது தானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால்  இன்பம்
நிலவின் முழுதும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா ,
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா
இரவா பகலா, குளிரா வெயிலா, என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா, இடியா மழையா, என்னை ஒன்றும் செய்யாதடி

என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் வெயில் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு , முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே 
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
இரவா பகலா, குளிரா வெயிலா, என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா, இடியா மழையா, என்னை ஒன்றும் செய்யாதடி

பெ : வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அண்டி வரை வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளினில் சாய வந்தேன் சொல்லாத காதலை சொல்லிட,
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன் ,
ஆ : அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுக்குள்ளே அள்ளி அணைப்பேன் ,

ஆ/பெ : இரவா பகலா, குளிரா வெயிலா, என்னை ஒன்றும் செய்யாதினி 
கடலா புயலா, இடியா மழையா, என்னை ஒன்றும் செய்யாதினி 
இரவா பகலா, குளிரா வெயிலா, என்னை ஒன்றும் செய்யாதினி 
கடலா புயலா, இடியா மழையா, என்னை ஒன்றும் செய்யாதினி

படம் : பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வரிகள் : பழனி பாரதி 
பாடகர்கள் : ஹரிஹரன்,சுஜாதா 


M : Iravaa Pakalaa Kulira Veyilaa
Yennai Ondrum Seyathadi
Kadalaa Puyalaa Idiya Malaiyaa
Yennai Ondrum Seyathadi
Aanaal Oonthan Mounam Mattum
Etho Seyuthadi, Ennai Etho Seyuthadi
Kaathal Idhuthanaa?

Sindhum Manipolae, Sitharum Yen Nenjam
Konjam Nee Vanthu, Koarththal Inbam

Nilavin Mudhugum Pennin Manathum
Endrum Ragasiyamthaanaa?
Kanavilaenum Solladi Pennae
Kaathal Nejamthaanaa?

Iravaa Pakalaa Kulira Veyilaa
Yennai Ondrum Seyathadi
Kadalaa Puyalaa Idiya Malaiyaa
Yennai Ondrum Seyathadi

Ennai Thodum Thendral Unnai Thodavillayaa?
Ennai Sudum Kaathal Unnai Sudavillayaa?
Ennil Vilum Malai Unnil Villavillayaa?
Ennil Yellum Minnal Unnil Yellavillayaa?

Mugathirukku Kangal Rendu
Muthathirukku Ithazhgal Rendu
Kaathalukku Nenjam Rendu
Ippodhu Ondringu Illayae

Thanimaiyilae, Thanimaiyilae
Thudipputhu Aethu Varai Sollu Veliyae

Thanimaiyilae, Thanimaiyilae
Thudipputhu Aethu Varai Sollu Veliyae
Iravaa Pakalaa Kulira Veyilaa
Yennai Ondrum Seyathadi
Kadalaa Puyalaa Idiya Malaiyaa
Yennai Ondrum Seyathadi

F : Vaanavilil Vaanavilil Vannam Aedhukku?
Vanthu Thodum Vanthu Thodum Thendral Aedhukku?
Andhi Vaanil Andhi Vaanil Vekkam Aedhukku?
Purindhadhu Purindhadu Indru Enakku

Malaiyinil Maegam Thoonga
Malarinil Vandu Thoonga
Unn Thoalinil Saaya Vandhaen
Solladha Kaathalai Sollida
Solli Rasippaen, Solli Rasippaen
Solli Cholli Nenjukullae Endrum Vasippaen

M : Alli Anaippaen, Alli Anaippaen
Konji Konji Nenjukullae Oonai Anaippaen

M /F : Iravaa Pakalaa, Veyilaa Kuliraa
Nammai Ondrum Seyathini
Kadalaa Puyalaa Idiya Malaiyaa
Nammai Ondrum Seyathini

Iravaa Pakalaa, Veyilaa Kuliraa
Nammai Ondrum Seyathini
Kadalaa Puyalaa Idiya Malaiyaa
Nammai Ondrum Seyathini

Film : Poovellam Kettuppaar (1999)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Pazhani Bharathi
Singers : Hariharan, Sujatha


No comments:

Plz Leave a Comment dude