Thursday, 4 July 2013

Elangaathu Veesudhey-Pithamagan

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே

கரும் பாறை மனசுல
மயில் தொகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே

பின்னி பின்னி சின்ன இழையோடும்
நெஞ்சை அல்லும் வண்ண துணி போல
ஒன்னுக்கொன்னு தான் எனஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமஞ்சி இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நெலம் போல
சிலருக்கு தா ன் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு , யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தாள் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே


மனசுல என்ன ஆகாயம்
தினம் தினம் அது புதி ர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா ? அதிசயத்தை யாரு புரிஞ்ச ?
வேத விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம் தோரும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்த மாலையாச்சு ?
ஆழம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே , தாயின் மடிய தேடி ஓடும்
மலை நரி போலே .......

கரும் பாறை மனசுல
மயில் தொகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

படம் : பிதாமகன்(2003)
இசை :இளையராஜா
வரிகள் : பழனி பாரதி
பாடகர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

Elangaathu Veesudhey
Isai Poala Paesudhey
Valaiyaadha Moongilil
Raagam Valainchu Oadudhey
Maegham Muzhichu Kaetkudhey

Karum Paarai Manasula
Mayil Thoagai Virikkudhey
Mazhai Chaaral Thelikkudhey
Pul Veli Paadhai Virikkudhey
Vaanavil Kudaiyum Pudikkudhey
Pul Veli Paadhai Virikkudhey
Vaanavil Kudaiyum Pudikkudhey


Maniyin Oasai Kaettu Mana Kadhavu Thirakkudhey
Puthiya Thaalam Poattu Udal Kaatril Midhakkudhey
Elangaathu Veesudhey
Isai Poala Paesudhey
Valaiyaadha Moongilil
Raagam Valainchu Oadudhey
Maegham Muzhichu Kaetkudhey

Pinni Pinni Chinna Ezhaiyoadum
Nenjai Allum Vanna Thuni Poala
Onnukkonnu Dhaan Enanji Irukku
Uravu Yellaam Amanji Irukku
Alli Alli Thandhu Uravaadum
Annamadi Indha Nelam Poala
Silarukku Dhaan Manasu Irukku
Ulagam Adhil Nilaichu Irukku
Naethu Thanimaiyila Poachu, Yaarum Thunai Illai
Yaaro Vazhi Thunaikku Vandhaal Yaedhum Inai Illai
Ulagathil Edhuvum Thanichu Illaiyae
Kuzhalil Raagam Malaril Vaasam Saerndhadhu Poala

Elangaathu Veesudhey
Isai Poala Paesudhey
Valaiyaadha Moongilil
Raagam Valainchu Oadudhey
Maegham Muzhichu Kaetkudhey

Manasula Enna Aagaayam
Dhinam Dhinam Adhu Pudhir Poadum
Ragasiyathai Yaaru Arinja? Adhisayathai Yaaru Purinja?
Vedha Vidhaikkira Kai Dhaanae
Malar Parikkudhu Dhinam Dhoarum
Malar Thodukka Naarai Eduthu
Yaar Thodutha Maalaiyaachu?
Aalam Vizhudhilae Oonjal Aadum Kili Yellaam
Moodum Siragilae Mella Paesum Kadhaiyellaam
Thaalaattu Kaettidaamalae, Thaayin Madiya Thaedi Oadum
Malai Nari Poalae.......
Karum Paarai Manasula
Mayil Thoagai Virikkudhey
Mazhai Chaaral Thelikkudhey
Pul Veli Paadhai Virikkudhey
Vaanavil Kudaiyum Pudikkudhey
Pul Veli Paadhai Virikkudhey
Vaanavil Kudaiyum Pudikkudhey

Maniyin Oasai Kaettu Mana Kadhavu Thirakkudhey
Puthiya Thaalam Poattu Udal Kaatril Midhakkudhey

Film : Pithamagan(2003)
Composer : Ilayaraja
Lyrics : Palani Bharathy
Singer : Sriram Parthasarathy



1 comment: