Sunday, 21 July 2013

Saththam Illaadha-Amarkalam


பெ : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

ஆ : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக்கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கைக்கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்

தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக்கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய் மொழிகேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக்கேட்டேன்

உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக்கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவைக்கிருக்கும் வானம்கேட்டேன்

நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக்கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக்கேட்டேன்

விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவேகேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள்கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித்துளிகேட்டேன்

ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக்கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாக்ஷி கிளியைக்கேட்டேன்

சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக்கேட்டேன்

இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம்கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன் தொலைந்துவிடாத பொறுமையைக்கேட்டேன்

சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம்கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள்கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடிகேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன் குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்

படம் : அமர்க்களம்(1999)
இசை :பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : பாலசுப்ரமணியம்,சித்ரா.


F : Saththam Illaadha Thanimai Kaettaen Yuththam Illaadha Ulagam Kaettaen
Raththaththil Enrenrum Vaegam Kaettaen Ragasiyamillaa Ullam Kaettaen

M : Saththam Illaadha Thanimai Kaettaen Yuththam Illaadha Ulagam Kaettaen
Raththaththil Enrenrum Vaegam Kaettaen Ragasiyamillaa Ullam Kaettaen

Saththam Illaadha Thanimai Kaettaen Yuththam Illaadha Ulagam Kaettaen
Raththaththil Enrenrum Vaegam Kaettaen Ragasiyamillaa Ullam Kaettaen
Uyiraikkillaadha Uravaik Kaettaen Otraik Kanneerth Thuliyaik Kaettaen
Valigal Seyyaadha Vaarththaik Kaettaen Vayadhukkuch Chariyaana Vaazhkkaik Kaettaen

Idigal Illaadha Maegam Kaettaen Ilamai Kedaadha Moagam Kaettaen
Parandhu Parandhu Naesam Kaettaen Paasaangillaadha Paasam Kaettaen
Pullin Nuniyil Paniyaik Kaettaen Poovin Madiyil Padukkaik Kaettaen

Thaanae Urangum Vizhiyaik Kaettaen Thalaiyaik Koadhum Viralaik Kaettaen
Nilavil Nanaiyum Soalaik Kaettaen Neelak Kuyilin Paadal Kaettaen
Nadandhu Poaga Nadhikkarai Kaettaen Kidandhu Urulap Pulveli Kaettaen
Thottup Padukka Nilavaik Kaettaen Ettip Pidikka Vinmeen Kaettaen
Dhukkam Marandha Thookkam Kaettaen Thookkam Manakkum Kanavaik Kaettaen
Bhoomikkellaam Oru Pagal Kaettaen Poovukkellaam Aayul Kaettaen

Manidharkkellaam Oru Manam Kaettaen Paravaikkellaam Thaay Mozhi Kaettaen
Ulagukkellaam Sama Mazhai Kaettaen Oorukkellaam Oru Nadhi Kaettaen
Vaanam Muzhukka Nilavaik Kaettaen Vaazhumboadhae Svarggam Kaettaen
Ennam Ellaam Uyarak Kaettaen Eriyum Theeyaay Kavidhai Kaettaen
Kanneer Kadandha Njaanam Kaettaen Kaamam Kadandha Yoagam Kaettaen
Sutrum Kaatrin Sudhandhiram Kaettaen Sittuk Kuruviyin Siragaik Kaettaen

Uchchandhalaimael Mazhaiyaik Kaettaen Ullangaalil Nadhiyaik Kaettaen
Pankonda Paadal Payilak Kaettaen Paravaikkirukkum Vaanam Kaettaen

Nanri Kedaadha Natpaik Kaettaen Nadungavidaadha Selvam Kaettaen
Malaril Oru Naal Vasikkak Kaettaen Mazhaiyin Sangeedham Rusikkak Kaettaen
Nilavil Nadhiyil Kulikkak Kaettaen Ninaivil Sandhanam Manakkak Kaettaen
Vizhundhaal Nizhal Poal Vizhavae Kaettaen Azhudhaal Mazhai Poal Azhavae Kaettaen
Aegaandham Ennoadu Vaazhak Kaettaen Eppoadhum Sirikkinra Udhadugal Kaettaen
Paniththuli Poal Oru Sooriyan Kaettaen Sooriyan Poal Oru Paniththuli Kaettaen

Raajaraajanin Vaalaik Kaettaen Valluvan Ezhudhiya Koalaik Kaettaen
Bhaaradhiyaarin Sollaik Kaettaen Paarththiban Thoduththa Villaik Kaettaen
Maayak Kannan Kuzhalaik Kaettaen Madhurai Meenaakshi Kiliyaik Kaettaen

Sondha Uzhaippil Soaraik Kaettaen Thottuk Kolla Paasam Kaettaen
Mazhaiyaip Poanra Porumaiyaik Kaettaen
Pullaip Poanra Panivaik Kaettaen Puyalaip Poanra Thunivaik Kaettaen

Idiyaith Thaangum Thunivaik Kaettaen Izhivaith Thaangum Idhayam Kaettaen
Dhroagam Thaangum Valimai Kaettaen Tholaindhuvidaadha Porumaiyaik Kaettaen

Sonnadhu Kaetkum Ullam Kaettaen Sonnaal Saagum Vaegam Kaettaen
Kayavarai Ariyum Kangal Kaettaen Kaalam Kadakkum Kaalgal Kaettaen
Chinnach Chinna Thoalvigal Kaettaen Seekkiram Aarum Kaayam Kaettaen
Moodiyillaadha Mugangal Kaettaen Poaliyillaadha Punnagai Kaettaen

Thavazhum Vayadhil Thaayppaal Kaettaen Thaavum Vayadhil Bommaigal Kaettaen
Aindhu Vayadhil Puththagam Kaettaen Aaraam Viralaay Paenaa Kaettaen
Kaasae Vaendaam Karunai Kaettaen Thalaiyanai Vaendaam Thaaymadi Kaettaen
Koottukkilipoal Vaazhak Kaettaen Kuraindhapatcha Anbaik Kaettaen

Iththanai Kaettum Kidaikkavillai Idhilae Edhuvum Nadakkavillai
Vaazhvae Vaazhvae Vaendaamenru Maranam Maranam Maranam Kaettaen

Film : Amarkalam(1999)
Composer : Bharatwaj
Lyrics : Vairamuthu
Singer : S.P.Balasubramaniam,Kalpana
  

No comments:

Plz Leave a Comment dude