மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம் அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை
படம் : அமர்க்களம் (1999)
இசை : பரத்வாஜ்
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
பாடகர் : S.P. பாலசுப்ரமணியம்
Maegangal Ennaith Thottu Poanadhundu
Sila Minnalgal Ennai Urasi Poanadhundu
Maegangal Ennaith Thottu Poanadhundu
Sila Minnalgal Ennai Urasi Poanadhundu
Dhaegangal Onrirandu Kadandhadhundu
Manam Sillendru Sila Poadhu Silirththadhundu
Moaganamae Unnaip Poala Ennai Yaarum Moochchuvarai Kollaiyittup Poanadhillai
Aagamoththam En Nenjil Unnaip Poala Eri Amilaththai Veesiyavar Yevarumillai
Maegangal Ennaith Thottu Poanadhundu
Sila Minnalgal Ennai Urasi Poanadhundu
Pirivondru Naerumendru Theriyum Pennae En Piriyaththai Adhanaal Kuraikka
Maattaen
Eriyum Udalenru Theriyum Pennae En Ilamaikku Theeyittu Erikka Maattaen
Maegangal Ennaith Thottu Poanadhundu
Sila Minnalgal Ennai Urasi Poanadhundu
Kannimaiyum Saamarangal Veesum Kaatril En Kaadhal Manam Thunduth Thundaay
Udaiyak Kandaen
Thundu Thundaay Udaindha Manath Thoolgalaiyellaam Adi Thooyavalae Unakkul
Tholaiththu Vittaen
Maegangal Ennaith Thottu Poanadhundu
Sila Minnalgal Ennai Urasi Poanadhundu
Sevvaayil Jeevaraasi Undaa Endrae Adi Dhinandhoarum Vinjnjaanam Thaedal Kollum
Un Sevvaayil Ulladhadi Enadhu Jeevan Adhu Theriyaamal Vinjnjaanam Edhanai Vellum
Evvaaru Kannirendil Kalandhu Poanaen Adi Evvaaru Madiyoadu Tholaindhu Poanaen
Ivvaaru Thanimaiyil Paesikkondaen En Iravinaik Kavidhaiyaay Mozhipeyarththaen
Maegangal Ennaith Thottu Poanadhundu
Sila Minnalgal Ennai Urasi Poanadhundu
Moodi Moodi Vaiththaalum Vidhaigalellaam
Mannai Mutti Mutti Mulaippadhu Uyirin Saatchi
Oadi Oadip Poagaadhae Oomaippennae
Naam Uyiroadu Vaazhvadharkuk Kaadhal Saatchi
Maegangal Ennaith Thottu Poanadhundu
Sila Minnalgal Ennai Urasi Poanadhundu
Maegangal Ennaith Thottu Poanadhundu
Sila Minnalgal Ennai Urasi Poanadhundu
Dhaegangal Ondrirandu Kadandhadhundu
Manam Sillendru Sila Poadhu Silirththadhundu
Moaganamae Unnaip Poala Ennai Yaarum Moochchuvarai Kollaiyittup Poanadhillai
Aagamoththam En Nenjil Unnaip Poala Eri Amilaththai Veesiyavar Yevarumillai
Film : Amarkalam (1999)
Composer : Bharathwaj
Lyrics : Vairamuthu
Singer : S P Balasubramaniam
No comments:
Plz Leave a Comment dude