ஆ : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பெ : பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆ : இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
பெ : மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
ஆ : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பெ : கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்
ஆ : உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
பெ : கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆ : பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
பெ : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
ஆ : சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
படம் : சுப்ரமணியபுரம் (2008)
இசை : ஜேம்ஸ் வசந்தன்
வரிகள் : தாமரை
பாடகர்கள் : தீபா மிரியம், பெல்லி ராஜ்
M : Kangal Irandal Un Kangal Irandal
Ennai Katti Izhuthai Izhuthai Pothathena
Chinna Sirippil Oru Kalla Sirippil
Ennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithai
Kangal Irandal Un Kangal Irandal
Ennai Katti Izhuthai Izhuthai Pothathena
Chinna Sirippil Oru Kalla Sirippil
Ennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithai
F : Pesa Enni Sila Naal Arugil Varuvaen
Pinbu Paarvai Pothum Ena Naan Ninaipaen NagarvaeNae Maatri
Kangal Ezhuthum Iru Kangal Ezhuthum
Oru Vanna Kavithai Kaathal Thaana
Oru Vaarthai Illayae Ithil Oosai Illayae
Ithai Irulilum Padithida Mudigirathey
M : Iruvum Allatha Pagalum Allatha
Pozhuthugal Unnodu Kazhiyuma
Thodavum Koodatha Padavum Koodatha
Idaiveli Appothu Kuraiyuma
F : Madiyinil Sainthida Thudikuthey
Marupuram Nyanamum Thadukuthey
Ithuvarai Yaaridamum Sollatha Kathai
M : Kangal Irandal Un Kangal Irandal
Ennai Katti Izhuthai Izhuthai Pothathena
Chinna Sirippil Oru Kalla Sirippil
Ennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithai
F : Karaigal Andaatha Kaatrum Theendatha
Manathukkul Eppothu Nuzhainthithaai
Udalum Allatha Uruvam Kollatha
Kadavulai Polvanthu Kalanditaai
Unnaiyandri Vaeroru Ninaivillai
Ini Intha Voonuyir Enathillai
Thadai Illai Saavilumae Unnodu Vara
F : Kangal Ezhuthum Iru Kangal Ezhuthum
Oru Vanna Kavithai Kaathal Thaana
Oru Vaarthai Illayae Ithil Oosai Illayae
Ithai Irulilum Padithida Mudigirathey
M : Pesa Enni Sila Naal Arugil Varuvaen
Pinbu Paarvai Pothum Ena Naan Ninaipaen NagarvaeNae Maatri
F : Kangal Irandal Un Kangal Irandal
Ennai Katti Izhuthai Izhuthai Pothathena
M : Chinna Sirippil Oru Kalla Sirippil
Ennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithai
Film : Subramaniapuram (2008)
Composer : James Vasanthan
Lyrics : Thamarai
Singers : Belly Raj,Deepa Mariam
No comments:
Plz Leave a Comment dude