Thursday, 31 October 2013

Kannukullae Unnai Vaithaen-Pennin Manathai Thottu


கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம்...பூவெல்லாம் உன் வாசம்..
நீ பேசும் பேச்செல்லாம்....நான் கேக்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி...!

நெடுங்காலமாய் உறங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே..
தரிசான என் நெஞ்சில்
விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
என் ஜீவன் வாழுதடி...
நீ ஆதரவாக தோழ் சாய்ந்தால்
என் ஆயுள் நீழுமடி...!

(கண்ணுக்குள்ளே)

மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!

(கண்ணுக்குள்ளே...ஏழையடி)

படம் : பெண்ணின் மனதை தொட்டு (2000)
இசை : S.A. ராஜ்குமார்
வரிகள் : வாலி
பாடகர் : உன்னிகிருஷ்ணன்

Kannukullae Unnai Vaithaen, Kannamma,
Naan Kangal Mooda Maattaen Adi Sellama,
Naan Kangal Mooda Maattaen Adi Sellama,
Adi Neethaan Yen Santhosham,
Poovellaam Unn Vaasam,
Nee Paesum Paechellaam,
Naan Kaetkum Sangeetham,
Unn Punnagai Naan Saemikindra Selvamadi,
Nee Illai Endraal Naanum Ingae Ezhaiyadi,

Nedunkaalamai Urangamale,
Enakullae Naesam Kidakindrathae,
Unai Parthathum Uyir Thoondavae,
Uthadugal Thaandi Therikindrathae,
Tharisaana En Nenjil Vilunthaayae Vithaiyaaga,
Nee Anbaai Paarkum Parvaiyilae,
Yen Jeevan Vaaluthadi,
Nee Aatharavaaga Thoal Sainthaal,
Yen Aayul Neelumadi,

(Kannukullae..)

Mazhai Megamai Urumaaravaa?
Unn Vaasal Vanthu Uyir Thoovavaa?
Manam Veesidum Malaraagavaa?
Unn Koonthal Meethu Thinam Pookava?
Kannaaga Karuthaaga,
Unai Kaapin Uyiraaga,
Unai Kandaen Kalainthaen Kalanthaenae,
Ada Unnul Urainthaenae,
Indra Yennul Maatram Thanthaayae,
Unnai Endrum Maraivaenae,

(Kannukullae...Ezhaiyadi)

Film : Pennin Manathai Thottu (2000)
Composer : Rajkumar SA
Lyrics : Vaali
Singer : Unni Krishnan

No comments:

Plz Leave a Comment dude