ஆ : நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (அற்றைத்..)
பெ : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(அற்றைத்..)
ஆ : மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பெ : பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன
ஆ : நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
பெ : இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
ஆ : நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
பெ : அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
ஆ : அற்றைத் திங்கள் அன்னினவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
பெ : யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
ஆ : யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
பெ : ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
ஆ : செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
பெ : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
ஆ : அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
ஆஹா..நீயா..ஆஹா..நீயா..ஆஹா..
படம் : இருவர் (1997)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன்,பாம்பே ஜெயஸ்ரீ
M : Narumugaiyae, Narumugaiyae, Nee Oru Naazhigai Nillaay..
Sengani Ooriya Vaai Thiranthu, Nee Oru Thirumoli Sollaai..
Attrai Thingal Annilavil, Netrith Tharala Neervadiya,
Kotrappoigai Aadiyaval, Neeyaa?
Attrai Thingal Annilavil, Netrith Tharala Neervadiya,
Kotrappoigai Aadiyaval, Neeyaa?
F : Thirumaganae, Thirumaganae, Nee Oru Naazhigai Paaraay,
Vennira Puraviyil Vanthavanae, Vaelvili Moligal Kaelaay..
Attrai Thingal Annilavil, Kottra Poigai Aadugaiyil,
Ottra Paarvai Paartthavanum, Neeyaa?
Attrai Thingal Annilavil, Kottra Poigai Aadugaiyil,
Ottra Paarvai Paartthavanum, Neeyaa?
M : Mangai Maanvizhi Ambugal En Maarthulaithathaena?
Mangai Maanvizhi Ambugal En Maarthulaithathaena?
F : Paandinaadanai Kannai Ennudaiya Vasanai Kondathaena?
M : Nilaavilae Paarththa Vannam, Kannaavilae Thoandrum Innum
Nilaavilae Paarththa Vannam, Kannaavilae Thoandrum Innum
F : Ilaithaen Thudithaen Porukkavillai..
Idaiyinil Maegalai Irukkavillai..
M : Narumugaiyae, Narumugaiyae, Nee Oru Naazhigai Nillaay..
Sengani Ooriya Vaai Thiranthu, Nee Oru Thirumoli Sollaai..
F : Attrai Thingal Annilavil, Kottra Poigai Aadugaiyil,
Ottra Paarvai Paartthavanum, Neeyaa?
M : Attrai Thingal Annilavil, Netrith Tharala Neervadiya,
Kotrappoigai Aadiyaval, Neeyaa?
F : Yaayum Yaayum Yaaraagiyaro, Nenju Naernthathaena?
Yaayum Yaayum Yaaraagiyaro, Nenju Naernthathaena?
M : Yaanum Neeyum Evvazhi Yaarithum Uravu Saernthathaena?
F : Orae Oru Theendal Seithaay, Uyir Kodi Pootthathaena?
Orae Oru Theendal Seithaay, Uyir Kodi Pootthathaena?
M : Semboolam Saerntha Neerththulipoal
Ambudai Nenjam Kalanthathenna?
F : Thirumaganae, Thirumaganae, Nee Oru Naazhigai Paaraay,
Vennira Puraviyil Vanthavanae, Vaelvili Moligal Kaelaay..
Attrai Thingal Annilavil, Kottra Poigai Aadugaiyil,
Ottra Paarvai Paartthavanum, Neeyaa?
M : Attrai Thingal Annilavil, Netrith Tharala Neervadiya,
Kotrappoigai Aadiyaval, Neeyaa?
Ahaa… Neeyaaa.. Ahaa… Neeyaaa.. Ahaa…
Film : Iruvar (1997)
Composer : A.R.Rahman
Lyrics : Vairamuthu
Singers : Unnikrishnan, Bombay Jayashree
No comments:
Plz Leave a Comment dude