Thursday, 13 March 2014

Malarnthum Malaratha-Paasamalar

பெ : மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

ஆ : மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

ஆ : யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப்பிறந்தாயடா
புவி ஆளப்பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழ பிறந்தாயடா
வாழ பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழ பிறந்தாயடா

பெ : தங்க கடியாரம் வைரமணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்
உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்

ஆ : நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

பெ : சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலன் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
ஆ : கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா

பெ : அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ

படம்: பாசமலர் (1961)
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள் : கவியரசு கண்ணதாசன்
பாடகர்கள் : டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா

F : Malarnthum Malaratha Paathi Malar Pola Valarum Vizhi Vanname
Vanthu Vidinthum Vidiyatha Kaalai Pozhuthaga Vilaintha Kalai Anname
Nathiyil Vilaiyadi Kodiyil Thalai Seevi Nadantha Ilam Thendrale
Valar Pothigai Malar Thondri Madurai Nagar Kandu Pozhintha Tamizh Mandrame

M : Malarnthum Malaratha Paathi Malar Pola Valarum Vizhi Vanname
Vanthu Vidinthum Vidiyatha Kaalai Pozhuthaga Vilaintha Kalai Anname
Nathiyil Vilaiyadi Kodiyil Thalai Seevi Nadantha Ilam Thendrale
Valar Pothigai Malar Thondri Madurai Nagar Kandu Pozhintha Tamizh Mandrame

M : Yaanai Padai Kondu Senai Pala Vendru
Aala Piranthayada Puvi Aala Piranthaiyada
Athai Magalai Manam Kondu Ilamai Vazhi Kandu
Vaazha Piranthaiyada Vaazha Piranthaiyada
Athai Magalai Manam Kondu Ilamai Vazhi Kandu
Athai Magalai Manam Kondu Ilamai Vazhi Kandu
Vaazha Piranthaiyada

F : Thanga Kadiyaram Vaira Maniyara Thanthu Manam Pesuvaar 
Porul Thanthu Manam Pesuvar
Maaman Thangai Magalana Mangai Unakkaga
Ulagai Vilai Pesuvaar Ulagai Vilai Pesuvaar
Maaman Thangai Magalana Mangai Unakkaga
Maaman Thangai Magalana Mangai Unakkaga
Ulagai Vilai Pesuvaar 

M : Nathiyil Vilaiyadi Kodiyil Thalai Seevi Nadantha Ilam Thendrale
Valar Pothigai Malar Thondri Madurai Nagar Kandu Pozhintha Tamizh Mandrame

F : Siragil Enai Moodi Arumai Magal Pola
Valartha Kathai Sollava
Kanavil Ninaiyatha Kaalam Idaivanthu
Piritha Kathai Sollava Piritha Kathai Sollava
M : Kannil Mani Pola Maniyin Nizhal Pola
Kalanthu Piranthomada
Intha Mannum Kadal Vaanum Marainthu Mudinthaalum
Marakka Mudiyathada
Uravai Pirikka Mudiyathada

F : Anbe Aarirararo Aarirararo Arirarariro
Anbe Aarirararo Anbe Aarirararo

Film : Paasamalar (1961)
Composer : MS Viswanathan,TK Ramamoorthy
Lyrics : Kannadasan
Singers : T M Sondararajan,P.Susheela

6 comments:

  1. ♥️♥️♥️♥️♥️

    ReplyDelete
  2. Namma edayathil erukkira paadal ever green sons

    ReplyDelete
  3. எதனாலும் ஒப்பிட்டு பார்க்க முடியாத பாடல்

    ReplyDelete