Thursday, 13 March 2014

Muthukkalo Kangal-Nenjirukkum Varai



ஆ : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

பெ : படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?
பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?

பெ : முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

ஆ : கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
பெ : கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட
ஆ : எழுந்த இன்பம் என்ன? என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன?
பெ : விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?

ஆ : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

பெ : ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன?
ஆ : அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?
பெ : மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?
ஆ : வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?

பெ : முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

படம்: நெஞ்சிருக்கும் வரை (1967)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

M : Muthukkalo Kangal, Thithippadho Kannam 
Santhiththa Velayil Sindikkavae Illai Thanduvittaen Ennai
F : Padiththa Padam Enna? Un Kangal Paarkum Paarvai Enna
Paalil Ooriya Jaathi Poovai Soodae Thudipadhenna..
Muthukkalae Pengal,Thithippadhe Kannam
Sandiththa Velayil Sindhikkavae Illai Thanduvittaen Ennai

M : Kanni Pennai Mella Mella Thendral Thalaatta..
F : Kadalin Alaigal Oodivandu Kaalai Neeraata
M : Yezhundha Inbam Enna? En Ennam Yengum Yekkam Enna?
F : Virundhu Ketpadhenna? Adayum Virainthu Ketpadhenna?

M : Muthukkalo Kangal, Thithippadho Kannam 
Santhiththa Velayil Sindikkavae Illai Thanduvittaen Ennai

F : Aasai Konjam Naanam Konjam Pinni Parpadhenna?
M : Arugil Nadanthu Madiyil Vizhunthu Aada Ketpadhenna?
F: Malarntha Kaathal Enna? Un Kaigal Maalai Aavadhenna?
M : Vazhai Thoranai Melathodu Poojai Seivadhenna?

Muthukkalae Pengal,Thithippadhe Kannam
Sandiththa Velayil Sindhikkavae Illai Thanduvittaen Ennai

Film : Nenjirukkum Varai (1967)
Composer : M.S.Viswanathan
Lyrics : Kannadasan
Singers : TM Sounderarajan, P Susheela

4 comments:

  1. excellent lines................... hats off sir

    ReplyDelete
  2. Very nice. Thank you for the service.

    ReplyDelete
  3. கும்தலக்கடி கும்மாவா கண்ணதாசன் ன்னா சும்மாவா.... கண்ணதாசன் டி எம் எஸ் சுசீலா எம் எஸ் விஸ்வநாதன் கூட்டணி சும்மா கலக்குது..... ஓம்குமார் மதுரை

    ReplyDelete
  4. Thank you for posting these wonderful lyrics. Good wishes

    ReplyDelete