Wednesday, 12 March 2014

Puthiya Ulagai-Yennamo Yedho


புதிய உலகை புதிய உலகை
தேடிப் போகிறேன் என்னை விடு!
விழியின் துளியில் நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன் என்னை விடு!

பிரிவில் தொடங்கி பூத்ததை,
பிரிவில் முடிந்துப் போகிறேன்!

மீண்டும் நான் மீளப் போகிறேன்
தூரமாய் வாழப் போகிறேன்

புதிய உலகை புதிய உலகை
தேடிப் போகிறேன் என்னை விடு!
விழியின் துளியில் நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன் என்னை விடு!

மார்பில் கீறினாய்
ரணங்களை வரங்கள் ஆக்கினாய்
தோளில் ஏறினாய்
எனை இன்னும் உயரம் ஆக்கினாய்

உன் விழி போல மண்ணில் எங்கும்
அழகு இல்லை என்றேன்!
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த
விலகி எங்கே சென்றேன்?

மேலே நின்று உன்னை நாளும் காணும் ஆசையில்…

புதிய உலகை புதிய உலகை
தேடிப் போகிறேன் என்னை விடு!

யாரும் தீண்டிடா
இடங்களில் மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா
சிரிப்பை என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும்
அமைதி இல்லை என்றேன்!
உன் மனம் இன்று வேண்டாம் என்றே
பறந்து எங்கே சென்றேன்?

வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா?

புதிய உலகை புதிய உலகை
தேடிப் போகிறேன் என்னை விடு!
பிரிவில் தொடங்கி பூத்ததை,
பிரிவில் முடிந்துப் போகிறேன்!
மீண்டும் நான் மீளப் போகிறேன்
தூரமாய் வாழப் போகிறேன்

புதிய உலகை புதிய உலகை
தேடிப் போகிறேன் என்னை விடு!

படம் : என்னமோ ஏதோ (2014)
பாடகர் : வைக்கம் விஜயலட்சுமி
இசை : டி.இமான்
வரிகள் : மதன்கார்க்கி

Puthiya Ulagai Puthiya Ulagai
Thedi Pogiraen Ennai Vidu
Vizhiyin Thuliyil Ennai Karaithu
Odi Pogiraen Ennai Vidu
Pirivil Thodangi Poothathai
Pirivil Mudinthu Pogiraen
Meendum Naan Meela Pogiraen
Thooramaai Vaazha Pogiraen

Puthiya Ulagai Puthiya Ulagai
Thedi Pogiraen Ennai Vidu
Vizhiyin Thuliyil Ennai Karaithu
Odi Pogiraen Ennai Vidu

Maarbil Keerinaai Ranangalai
Varangal Aakinaai
Tholil Yerinaai Enai Innum
Uyaram Aakinaai
Un Vizhi Pola Mannil Engum
Azhagu Illai Enben
Un Vizhi Ingu Kanneer Sintha
Vilangi Engae Sendren
Melae Nindru Unnai Naalum
Kaanum Aasaiyil

Puthiya Ulagai Puthiya Ulagai
Thedi Pogiraen Ennai Vidu

Yaarum Theendida Manangalil
Manathai Theendinaai
Yaarum Paarthida Siripai
Yen Ithazhil Theetinaai
Un Manam Pola Vinnil Engum
Amaithi Illai Enben
Un Manam Indru Vendaam Endre
Paranthu Enge Sendren
Veroor Vaanam Veroor Vaazhkai
Ennai Yerkuma

Puthiya Ulagai Puthiya Ulagai
Thedi Pogiraen Ennai Vidu
Pirivil Thodangi Poothathai
Pirivil Mudinthu Pogiraen
Meendum Naan Meela Pogiraen
Thooramaai Vaazha Pogiraen
Puthiya Ulagai Puthiya Ulagai
Thedi Pogiraen Ennai Vidu

Film : Yennamo Yedho (2014)
Composer : D.Imman
Lyrics : Madhan Karky
Singer : Vaikom Vijayalakshmi

No comments:

Plz Leave a Comment dude