Saturday, 19 April 2014

Sriranga Ranga-Mahanadhi

பெண்குழு : கங்கா சங்காச காவேரி ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசாரி நமஸ்தேஸ்து சுகாசரி

பெ : ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

பெ : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
தெய்வப் பாசுரம் பாடடி

பெ : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

பெ : கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

பெ : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

ஆ : கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கள நீராட முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி

ஆ : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
தெய்வப் பாசுரம் பாடடி

ஆ : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

இருவர் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

படம்: மகாநதி (1994)
இசை : இளையராஜா
வரிகள்: வாலி
பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம், உமா ரமணன், ஷோபனா

Female Chorus : Ganga Sangaacha Kaaveri.. Sri Rangesha Manohari..
Kalyana Kaari Kalushaari.. Namastheasthu Subhaachari..

F : Sriranga Ranga Naathanin Paatham Vanthanam Seiyadi
Sridevi Ranga Naayagi Naamam Santhatham Solladi
Sriranga Ranga Naathanin Paatham Vanthanam Seiyadi
Sridevi Ranga Naayagi Naamam Santhatham Solladi
Inbam Pongum Then Gangai Neeraadi
Manjal Kungumam Mangai Nee Soodi
Inbam Pongum Then Gangai Neeraadi
Thenral Poala Nee Aadadi
Manjal Kungumam Mangai Nee Soodi
Dheiva Paasuram Paadadi..

Sriranga Ranga Naathanin Paatham Vanthanam Seiyadi
Sridevi Ranga Naayagi Naamam Santhatham Solladi..

F : Kollidam Neer Meethu Narthanam Aadum
Melliya Poongaatru Manthiram Paadum
Sengani Maelaadum Maamaram Yaavum
Ranganin Paersolli Saamaram Veesum
Annaalil Choazha Mannargal Aakki Vaitha Nar Aalayam
Ammaadi Enna Solluvaen Koavil Goapuram Aayiram
Thaenaaga Nenjai Allumae Dheyva Poonthamizh Paayiram

F : Sriranga Ranga Naathanin Paatham Vanthanam Seiyadi
Sridevi Ranga Naayagi Naamam Santhatham Solladi..
Inbam Pongum Then Gangai Neeraadi
Thenral Poala Nee Aadadi
Manjal Kungumam Mangai Nee Soodi
Dheiva Paasuram Paadadi..
Sriranga Ranga Naathanin Paatham Vanthanam Seiyadi
Sridevi Ranga Naayagi Naamam Santhatham Solladi..

M : Kannadam Thaai Veedu Enrirunthaalum
Kanni Un Maruveedu Thennagamaagum
Gangaiyin Maelaana Kaaviri Theertham
Mangala Neeraada Munvinai Theerkkum
Neervannam Engum Maevida Nanjai Punjaigal Paaradi
Oorvannam Enna Kooruvaen Dhaeva Loagamae Thaanadi
Vaerengu Sendra Pothilum Intha Inbangal Aethadi..

M : Sriranga Ranga Naathanin Paatham Vanthanam Seiyadi
Sridevi Ranga Naayagi Naamam Santhatham Solladi..
Inbam Pongum Then Gangai Neeraadi
Thenral Poala Nee Aadadi
Manjal Kungumam Mangai Nee Soodi
Dheiva Paasuram Paadadi..
Sriranga Ranga Naathanin Paatham Vanthanam Seiyadi
Both : Sriranga Ranga Naathanin Paatham Vanthanam Seiyadi
Sridevi Ranga Naayagi Naamam Santhatham Solladi..

Film : Mahanadhi (1994)
Composer : Ilaiyaraaja
Lyrics : Vairamuthu
Singers : S.P.Balasubrahmanyam, Shobana,Uma Ramanan

No comments:

Plz Leave a Comment dude