Wednesday, 5 June 2013

Nenjukkul Peidhidum - Vaaranam Aayiram

ஆ : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

ஆ : ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகமில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
போகாதே..
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

ஆ : தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
பெ : தூக்கி சென்றாள்..
ஆ : ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
பெ : போகும் போது..
ஆ : வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா ஓ 
என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

பெ : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
ஆ/பெ :நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஆ : ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
பெ : அந்தாதி

படம் : வாரணம் ஆயிரம்(2008)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : தாமரை
பாடகர் : ஹரிஹரன்,க்ரிஷ்,தேவன்,பிரச்சன்னா.

M : Nenjukkul Peidhidum Maamazhai
Neerukkul Moozhkidum Thaamarai
Sattendru Maaruthu Vaanilai
Penne Un Mael Pizhai

Nillaamal Veesidum Paer Alai
Nenjukkul Neendhidum Kaalalai
Ponvannam Soodidum Kaarigai
Penne Un Kaanjalai

Om Shanthi Shanthi Om Shanthi
En Uyirai Uyirai Nee Aenthi
Aen Sentraai Sentraai Enai Thaandi
Ini Nee Thaan Enthan Andhaadhi

Nenjukkul Peidhidum Maamazhai
Neerukkul Moozhkidum Thaamarai
Sattendru Maaruthu Vaanilai
Penne Un Mael Pizhai

M : Aetho Ondru Ennai Eerkka
Mookkin Nuni Marmam Saerkka
Kallaththanam Aethum Illaa
Punnnagayo Pogam Illaa

Nee Nintra Idam Entraal Vilai Aeri Pogaatho
Nee Sellum Idam Ellaam Panikatti Aagatho
Ennodu Vaa Veedu Varaikkum
En Veettai Paar Ennai Pidikkum

Ival Yaaro Yaaro Theriyaathe
Ival Pinnaal Nenje Pogaathe
Ithu Poiyo Meiyo Theriyaathe
Ival Pinnaal Nenje Pogaathe
Nenjukkul..

M : Thoookkangalai Thookkich Chentraal
F : Thookkich Chentraal..
M : Aekkangalai Thoovich Chendraal
Unnai Thaandi Pogum Pothu
F : Pogum Pothu...
M : Veesum Kaattril Veechchile
Nillendru Nee Sonnaal En Kaadhal Nagarathe
Nee Soodum Poovelllaam Oru Pothum Udhiraathe
Kaadhal Enaik Kaetkavillai
Kaetkaathathu Kaadhil Illa Aa
En Jeevan Jeevan Nee Thaane
Ena Thondrum Neram Idhu Thane
Nee Illai Illai Entraale
En Nenjam Nenjam Thaangaathe

F : Nenjukkul Peidhidum Maamazhai
Neerukkul Moozhkidum Thaamarai
Sattendru Maaruthu Vaanilai
Penne Un Mael Pizhai
M/F : Nillaamal Veesidum Paer Alai
Nenjukkul Neendhidum Kaalalai
Ponvannam Soodidum Kaarigai
Penne Un Kaanjalai

M : Om Shanthi Shanthi Om Shanthi
En Uyirai Uyirai Nee Aenthi
Aen Sentraai Sentraai Enai Thaandi
Ini Nee Thaan Enthan Andhaadhi
F : Andhaadhi

Film : Vaaranam Aayiram (2008)
Composer : Harris Jayaraj
Lyrics : Thamarai
Singers : Hariharan,Krish,Devan,Prasanna

No comments:

Plz Leave a Comment dude