Monday, 29 June 2015

Oru Vetkam Varudhe-Pasanga

Oru Vetkam Varudhe-Pasanga

பெ : ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

ஆ : மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பர பரபரவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத் தாண்டிடுமே

பெ : மேலும் சில முறை
உன் குறும்பிலே நானே தோற்கிறேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆ : ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
பெ : ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் கேட்க்கும் நாள் வரும்

ஆ : மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே
பெ : இது என்ன முதலா முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
ஆ : கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பெ : இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
ஆ : வர வர வரக்கரைத் தாண்டிடுமே

ஆ : ஆ.. காற்றில் கலந்து நீ
என் முகத்திலே ஏனோ மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால் 
என் மேல் உதிர்கிறாய்
பெ : தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே வரணும் எதிரினிலே
ஆ : வெயிலிலே ஊர்கோலம் இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே

பெ : ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைபாயுதே
ஆ : இது என்ன முதலா முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
பெ : போகச்சொல்லி கால்கள் தள்ள
ஆ : நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
பெ : இது முதல் அனுபவமே
ஆ : துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத் தாண்டிடுமே

படம் : பசங்க (2009)
இசை : ஜேம்ஸ் வசந்தன்
வரிகள் : தாமரை
பாடகர்கள் : நரேஷ் ஐயர்,ஷ்ரேயா கோஷல்


F : Oru Vetkam Varudhe Varudhe
Siru Acham Tharuthae Tharuthae
Manam Indru Alai Paayuthae
Ithu Enna Muthalaa Mudivaa
Ini Enthan Uyirum Unathaa
Puthu Inbam Thaalaatuthae
Poga Cholli Kaalgal Thalla
Nirkka Cholli Nenjam Killa
Ithu Muthal Anubavamae
Ini Ithu Thodarnthidumae
Ithu Tharum Tharum Thadumaatram Sugam

M : Mazhai Indru Varumaa Varumaa
Kulir Konjam Tharumaa Tharumaa
Kanavennai Kalavaaduthae
Ithu Enna Muthalaa Mudivaa
Ini Enthan Uyirum Unathaa
Puthu Inbam Thaalaatuthae
Ketu Vaangi Kollum Thunbam
Kooru Potu Kollum Inbam
Para Para Para Venavae
Thudi Thudithidum Manamae
Vara Vara Vara Karai Thaandidumae

F : Maelum Sila Murai Un Kurumbile Naane Thorkiraen
Un Madiyilae En Thalaianai Irunthaal Uranguvaen
M : Aanin Manathirkkullum Penmai Irukkirathae
Thoonga Vaithidavae Nenjam Thudikkirathae
F : Oru Vari Nee Solla Oru Vari Naan Solla
Ezhuthidum Kaathal Kaaviyam Anaivarum Ketkum Naal Varum

M : Mazhai Indru Varumaa Varumaa
Kulir Konjam Tharumaa Tharumaa
Kanavennai Kalavaaduthae
F : Ithu Enna Muthalaa Mudivaa
Ini Enthan Uyirum Unathaa
Puthu Inbam Thaalaatuthae
M : Ohh Ketu Vaangi Kollum Thunbam
Kooru Potu Kollum Inbam
F : Ithu Muthal Anubavamae
Ini Ithu Thodarnthidumae
M : Vara Vara Vara Karai Thaandidumae

M : Kaatril Kalanthu Nee En Mugathilae Yeno Mothinaai
Poo Marangalil Nee Iruppathaal En Mel Uthirgiraai
F : Ohh Thoothu Anuppidavae Neram Enakkillaiyae
Ninaitha Pozhuthinilae Varanum Ethirinilae
M : Veyililae Oorgolam Ithuvarai Naam Ponom
Nigazhgirathae Kaar Kaalamae Nanainthiduvoam Naal Dhorumae

F : Oru Vetkam Varudhe Varudhe
Siru Acham Tharuthae Tharuthae
Manam Indru Alai Paayuthae
M : Ithu Enna Muthalaa Mudivaa
Ini Enthan Uyirum Unathaa
Puthu Inbam Thaalaatuthae
F : Ohh Poga Cholli Kaalgal Thalla
M : Nirkka Cholli Nenjam Killa
F : Ithu Muthal Anubavamae
M : Thudi Thudithidum Manamae
Vara Vara Vara Karai Thaandidumae

Film : Pasanga (2009)
Composer : James Vasanthan 
Lyricist: Thamarai 
Singers: Naresh Iyer, Shreya Ghoshal

No comments:

Plz Leave a Comment dude