ஆ : மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா
பெ : விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே
ஆ : வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை
பெ : நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை
ஆ : மலர்களை எரிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை
பெ : கண்ணில் ஆசை துடிக்குதே
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
ஆ : வெட்கப் படாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி
ஆ : மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
பெ : பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள்
தீண்ட மட்டும் அவசியம் புரியாது
ஆ : காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
பெ : இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அழியாது
இதயம் எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது
ஆ : ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
உன் எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
பெ : கைகள் தொடாமல் கன்னி
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
ஆ : மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
படம் : பூமகள் ஊர்வலம் (1999)
இசை : சிவா
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : சுஜாதா, ஹரிஹரன்
M : Malare Oru Vaarthai
Pesu
Ippadikku Poongaatru
Malare Oru Vaarthai Pesu
Ippadikku Poongaatru
Kaatru Vanthu Kaadhu
Kadithum
Innum Enna Mounamo
Modi Vanthu Muthamittal
Mounam Theerumo?
Achcham Thaan Un Adaiyo?
Vetkkam Thaan
Mundhaanaiyo?
Mounam Thaan Un Veliyo?
Sempoove Vaa Vaa Vaa Vaa
F : Vizhiye Oru
Varthaiyaanal
Mozhi Enbathu Vendame
M : Vaarthaiyaadi Paartha
Pothu
Kadhal Varavillai
Kadhal Vanthu Serntha
Pothu
Vaarthai Varavillai
F : Nangu Kangal Pesum
Pothu
Thaai Mozhikku Idamillai
Mounam Paadum Paadal Pole
Manathukku Sugamillai
M : Malargalai Eripathu
Muraiyillai
Mounathai Udaipathu
Sariyillai
Monathin Osaigal Kelamal
Vaarthaigal Purivathu
Ezhithillai
F : Kannil Aasai
Thudikkuthe Anbe Anbe
Nenju Pidikithu Mullai
Veliyil Sollavillai
M : Vetkka Padatha
Pookkalum
Vandugal Thodathadi
Mutham Tharamal Vetkkam
Sayam Pogathadi
M : Malare Oru Vaarthai
Pesu
Ippadikku Poongaartu
F : Pennidathil
Ullathellam Pennukku Theriyaathu
Vor Annin Kaigal Theendu
Mattum
Avasiyam Puriyaathu
M : Kadhal Mangai Sonna
Vaarthai
Kavithaiyil Kidaiyaathu
Ada Kadhalikkum Aatkkal
Pole
Kavingargal Kidaiyaathu
F : Iravile Thaamarai
Malaraathu
Pagalile Alliyum
Avizhaathu
Idhayappoo Eppothu
Malarum Endru
Ithuvarai Sonnavar
Kidaiyaathu
M : Ye Raajamohini
Ramba Ramba
Un Edaikku Edai Thangam
Tharathudikkum Nenjam
F : Kaigal Thodamal
Kangalal Nenjai Pandaadinaai
Ratham Varamaal
Paarvaiyaal Ennai Thundaainaai
M : Malare Oru Vaarthai
Pesu
Ippadikku Poongaartu
Malare Oru Vaarthai Pesu
Ippadikku Poongaartu
Kaatru Vanthu Kaadhu
Kadithum
Innum Enna Mounamo
Modi Vanthu Muthamittal
Mounam Theerumo?
Achcham Thaan Un Adaiyo?
Vetkkam Thaan
Mundhaanaiyo?
Mounam Thaan Un Veliyo?
Sempoove Vaa Vaa Vaa Vaa
Malare Oru Vaarthai Pesu
Ippadikku Poongaartu
Film : Poomagal Oorvalam
(1999)
Composer : Siva
Lyrics : Vairamuthu
Singers : Hariharan,
Sujatha
No comments:
Plz Leave a Comment dude