Sunday, 28 April 2013

Athikaai Kaai Kaai - Bale Pandiya



அத்திக்காய் காய் காய்,ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ
நீ என்னை போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்,ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய் காய்,ஆலங்காய் வெண்ணிலவே

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய் (கன்னிக்காய்...)
மாதுளங்காய் ஆனாலும் என் உள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என் உயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளை காய்(இரவுக்காய்...)
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என் உயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்,ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

ஏளக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்(ஏளக்காய்...)
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என் உயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்,ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் கிளர்ந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ(உள்ளமெல்லாம்...)
கோதை எனை காயாதே கொற்றவனைபோல் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத்திக்காய் காய் காய்,ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

படம்: பலே பாண்டியா(1962)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள்: பி.சுஷிலா,ஜமுனாராணி,பி.பீ.ஸ்ரீனிவாஸ்,டி.எம்.சௌந்தரராஜன்

Athi Kaai Kaai Kaai Aalangai Vennilave
Ithikkai Kaayathe Ennai Pol Pennallavo
Nee Ennai Pol Pennallavo

Athi Kaai Kaai Kaai Aalangai Vennilave
Ithikkai Kaayathe En Uyirum Neeyallavo
En Uyirum Neeyallavo

Kannikaai Aasaikaai Kaathal Konda Paavaikaai
Ange Kaai Avaraikaai Mangai Enthan Kovaikaai (Kannikaai..)
Maathulangaai Aanalum En Ulangai Aagumo
Ennai Nee Kayathe En Uyirum Neeyallavo
Ithikkai Kaayathe Ennai Pol Pennallavo

Iravukkai Uravukkai Aengum Intha Aezhaikaai
Neeyum Kaai Nithamum Kaai Neril Nirkum Ivalai Kai (Iravukkai...)
Uruvangai Aanalum Paruvangai Aagumo
Ennai Nee Kaayathe Ennuyirum Nee Allavo

Athi Kaai Kaai Kaai Aalangai Vennilave
Ithikkai Kaayathe En Uyirum Neeyallavo

Aelakkai Vaasanai Pol Engal Ullam Vaazha Kaai
Saathikkai Pettagam Pol Thanimai Inbam Kaniyakai (Aelakkai...)
Sonnathellam Vilangayo Thoothuvazhngaai Vennila
Ennai Nee Kaayathe Ennuyirum Nee Allavo

Athi Kaai Kaai Kaai Aalangai Vennilave
Ithikkai Kaayathe En Uyirum Neeyallavo

Ullamellam Milagayo Ovvoru Per Suraikaayo
Vellarikkai Kilarnthathu Pol Vennilave Sirithaayo
Kothaienai Kaayathe Kotravanaipol Vennila
Iruvaraiyum Nee Kaayathe Thanimayilengaai Vennila

Athi Kaai Kaai Kaai Aalangai Vennilave
Ithikkai Kaayathe En Uyirum Neeyallavo

Film: Balepandiya(1962)
Composers:M.S.Visawanathan & RamaMoorthy
Lyrics: Kannadasan
Singers: P Susheela,Jamunarani,PB Srinivas,Tm Soundararajan

No comments:

Plz Leave a Comment dude