ஆ : அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெ : தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
ஆ : தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இள மயிலே
ஆ : அந்தி மழை பொழிகிறது
பெ : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
ஆ : தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீல் நிற்கும்போதே வேர்க்கின்றது
பெ : நெஞ்சுபொறு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்கலிள் சந்தனமாய் எனை பூசுகிறேன்
பெ : அந்தி மழை பொழிகிறது
ஆ : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெ : ஆ சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
பெ : அந்தி மழை பொழிகிறது
ஆ : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
படம் : ராஜ பார்வை.(1981)
இசை : இசைஞானி இளையராஜா.
வரிகள் : வைரமுத்து.
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
M : Andhi Mazhai Pozhigiradhu
Ovvoru Thuliyilum Un Mugam Therigiradhu
Andhi Mazhai Pozhigiradhu
Ovvoru Thuliyilum Un Mugam Therigiradhu
Indiran Thottathu Munthiriyae
Manmadhan Naattukkuk Manthiriyae
Andhi Mazhai Pozhigiradhu
Ovvoru Thuliyilum Un Mugam Therigiradhu
F : Thaenil Vanndu Moozhgum Podhu
Paavam Endru Vandhaal Maadhu
Nenjukkul Theeyai Vaiththu Mogam Enbaai
Thanneeril Moozhgikkondae Thaagam Enbaai
M : Thanimaiyilae Verumaiyilae Eththanai Naaladi Ila Maiyilae
Kettana Iravugal Suttana Kanavugal Imaigalum Sumaiyadi Ilamayilae
M : Andhi Mazhai Pozhigiradhu
F : Ovvoru Thuliyilum Un Mugam Therigiradhu
M : Dhaegam Yaavum Theeyin Dhaagam
Dhaagam Theera Nee Dhaan Maegam
Kannukul Mullai Vaiththu Yaar Thaithadhu
Thanneeril Nirkkum Podhae Vaerkindradhu
F : Nenjupporu Konjamiru Thaavani Visirigal Veesugiraen
Manmadha Ambugal Thaitha Idhayathil Sandhanamai Ennai Poosugiraen
F : Andhi Mazhai Pozhigiradhu
M : Ovvoru Thuliyilum Un Mugam Therigiradhu
F : Ahahah Sippiyil Thappiya Niththilamae
Ragasiya Raathiri Puththagamae
F : Andhi Mazhai Pozhigiradhu
M : Ovvoru Thuliyilum Un Mugam Therigiradhu
Film : Raaja Paarvai (1981)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Vairamuthu
Singer : S P Balasubramaniam, S Janaki
No comments:
Plz Leave a Comment dude