ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிய பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பாக்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
படம் : ஜானி (1980)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
பாடகர் : எஸ்.பி.ஷைலஜா
Aasaiya Kaathula Thoothu Vittu
Aadiya Poovula Vaadai Pattu
Sethiya Kettoru Jaadai Thottu
Paaduthu Paatu Onnu
Kuyil Ketkuthu Pattai Ninnu
Aasaiya Kaathula Thoothu Vittu
Aadiya Poovula Vaadai Pattu
Vaasam Poovaasam Vaaliba Kaalathu Nesam
Maasam Thai Maasam Malliya Poomanam Veesum
Nesathula Vantha Vaasathula
Nenjam Paaduthu Jodiya Theduthu Pinjum Vaaduthu Vaadaiyila
Vaasam Poovaasam Vaaliba Kaalathu Nesam
Maasam Thai Maasam Malliya Poomanam Veesum
Thenu Poonthenu Thenthuli Kettathu Naanu
Maanu Ponmanu Theyila Thottathu Maaanu
Oodi Vara Unnai Thedi Vara
Thaalam Poovula Thaavum Kathula Mogam Aeruthu Aasaiyila
Paakum Pothula Ekkam Theerala Thegam Vaaduthu Pesaiyila
Aasaiya Kaathula Thoothu Vittu
Aadiya Poovula Vaadai Pattu
Sethiya Kettoru Jaadai Thottu
Paaduthu Paatu Onnu
Kuyil Ketkuthu Pattai Ninnu
Paaduthu Paatu Onnu
Kuyil Ketkuthu Pattai Ninnu
Film : Jhonny (1980)
Composer : Music Maestro Ilaiyaraaja
Lyrics : Gangai Amaran
Singer : S P Shailaja
ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.
ReplyDeleteஇந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி முகமது ஹசான்...
Deleteஎஸ்.பி.சைலஜாவின் பாடல்களில் என்னை மிகவும் மெய் மறக்க வைத்த பாடல் "மீண்டும் கோகிலா" திரைப்படத்தின்
சின்னஞ்சிறு வயதில் பட பாடல்...
pppppppaaaaaaaaaaaaaaaaaa
ReplyDelete