Friday, 3 May 2013

Ila Nenje Vaa - Vanna Vanna Pookal


இளநெஞ்சே வா...நீ இங்கே வா

இளநெஞ்சே வா,தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்,மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்..என்னோடு ஒரு சங்கீதம்...
இந்நேரம்...

(இள நெஞ்சே வா)

பச்சைப் புல் மெத்தை விரித்து,அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்,செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள்,தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்,பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடை போலே,வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம்,செம்மீன் தேடுதே...
இந்நேரம்...

(இள நெஞ்சே வா)

அற்புதம் என்ன உரைப்பேன்..இங்கே வர என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்தேன்,இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுத்தேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்,வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே,சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும்,என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு,விண்ணைத் தீண்டுதே...
இந்நேரம்...

(இள நெஞ்சே வா)

படம்: வண்ண வண்ண பூக்கள் (1992)
இசை: இசைஞானி இளையராஜா
வரிகள்: வாலி
பாடகர்கள்: கே ஜே யேசுதாஸ்


Ila Nenje Vaa...Nee Inge Vaa

Ila Nenje Vaaa Thendral Therinil Engum Poi Varalam
Ada Ange Paar Manjal Vaan Mugil Kayyaal Naam Thodalam
Kannodu Oru Sandosham..Ennodu Oru Sangeetham...Inneram (Ila Nenje)

Pachai Pull Methai Virithu Ange Ilam Thathaigal Thathi Kudhikkum
Pattu Poo Mottu Virikkum Sendhen Pera Ponvandu Vattam Adikkum
Suttrilum Moongil Kaadugal Thendralum Thoongum Veedugal
Uchiyin Mele Paarkiren Patchigal Vaazhum Koodugal
Mannin Aadai Pole Vellam Odudhe
Ange Naarai Koottam Semmeen Thedudhe...Inneram (Ila Nenje)

Arpudham Ena Uraippen Inge Vara Eppavum Ennai Marappen
Karpanai Kotti Juvithen, Inge Andha Kambanai Vambukkizhuthen
Varnithu Paadum Kavignan Naan, Vannangal Theettum Kalaignan Naan
Sindhanai Theril Eriye Suttrida Yengum Ilaignan Naan
Kannil Kaanum Yaavum Ennai Thoondudhe
Endhan Kaigal Neendu Vinnai Theendudhe...Inneram(Ila Nenje)

Film: Vanna Vanna Pookkal(1992)
Composer: Music Maestro Ilaiyaraja
Lyrics: Vaali
Singers: KJ Yesudhas

No comments:

Plz Leave a Comment dude