Sunday, 5 May 2013

Inbame Unthan Per Penmaiyo - Idhayakkani



இன்பமே உந்தன் பேர் பெண்மையோ

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி உன் நெஞ்சில் ஆடும்
பருவக்கொடி

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

சர்க்கரை பந்தல் நான், தேன் மழை சிந்த வா
சர்க்கரை பந்தல் நான், தேன் மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே, சாகச நாடகம் எங்கே
தேனோடு பால் தரும் செவ்விளநீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ

பஞ்சனை வேண்டுமோ,நெஞ்சனை போதுமே
பஞ்சனை வேண்டுமோ,நெஞ்சனை போதுமே
கை விரல் ஓவியம் காண, காலையில் பூமுகம் நாண
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண் தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

மல்லிகை தோட்டமா, வெண் பனி கூட்டமோ
மல்லிகை தோட்டமா, வெண் பனி கூட்டமோ
மாமலை மேல் விளையாடும், மார்பினில் பூந்துகிலாகும்
மங்கல வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில் ஆடும்

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி என் நெஞ்சில் ஆடும்
பருவக்கொடி

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

படம்: இதயக்கனி(1975)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள்: பி.சுசீலா,டி.எம்.சௌந்தரராஜன்

Inbame Unthan Per Penmaiyo 
Inbame Unthan Per Penmaiyo 

En Idhayakkani Nee Sollum Sollil 
Mazhalaik Kili En Nenjil Aadum 
Paruvakkodiii...... 

Inbame Unthan Per Vallalo 

Un Idhayakkani Naan Sollum Sollil 
Mazhalaik Kili Un Nenjil Aadum 
Paruvakkodiii...... 

Inbame Unthan Per Vallalo 


Sarkarai Pandhal Naan, Then Mazhai Sindha Vaa 

Sarkarai Pandhal Naan, Then Mazhai Sindha Vaa 
Sandhana Medaiyum Inge, Saagasa Naadagam Enge 
Thenodu Paal Tharum Sevvilaneergalai 
Oriru Vaazhaigal Thaangum 
Devathai Pol Ezhil Mevida Nee Vara 
Naalum En Manam Engum 
Inbame Unthan Per Penmaiyo 

Panjanai Vendumo, Nenjanai Podhume 

Panjanai Vendumo, Nenjanai Podhume 
Kai Viral Oviyam Kaana, Kaalaiyil Poomugam Naana 
Ponnoli Sindhidum Mellia Deepathil 
Poridum Menigal Thulla 
Punnagaiyodoru Kan Tharum Jaadaiyil 
Pesum Mandhiram Enna 
Inbame Unthan Per Vallalo 

Malligai Thottamo, Ven Pani Kootamo 

Malligai Thottamo, Ven Pani Kootamo 
Maamalai Mel Vialaiyaadum , Maarbinil Poonthugilaagum 
Mangala Vaathiyam Pongidum Osaiyil 
Megamum Vaazhthisai Paadum 
Maaligai Vaasalil Aadiya Thoranam 
Vaana Veethiyil Aadum 

Inbame Unthan Per Penmaiyo 

En Idhayakkani Nee Sollum Sollil 
Mazhalaik Kili En Nenjil Aadum 
Paruvakkodiii...... 

Inbame Unthan Per Vallalo 


Film: Idhayakani(1975)

Composer: M.S. Viswanathan
Lyrics: Kaanadasan
Singers: P.Susheela,T.M.Soundarrajan

No comments:

Plz Leave a Comment dude