Saturday, 27 January 2018

Poonthenil Kalanthu-Enippadigal

Poonthenil Kalanthu-Enippadigal P Suheela
பெ : பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பொன்வண்ண ஏணி ஒன்று செய்து கொடுத்தான்
எனை வளர்த்து விட்டான்
போகாத மேல் படிக்குப் போக வைத்தான்
கலை மலரச் செய்தான் - அவன்
நான் வாழ வேண்டுமென்று நாள்தோறும் நினைத்தான்
நன்றாக ஓரிடம் தேடித்தந்தான்
அவன் எனைத்தான் தினம் நினைத்தான்
நெஞ்சில் என்னோடு கலந்து விட்டான்

பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

மாணிக்க மூக்குத்தி சூட்டி விட்டான்
நான் மயங்கி நின்றேன்
மீனாட்சி போல என்னை ஜொலிக்க வைத்தான்
மனம் மலர்ந்து நின்றேன்
தேர் கொண்ட காதலியை ஊர்கோலச் சிலையாய்
தீராத திருமகள் ஆக்கி வைத்தான்
அதில் எனக்கும் ஒரு மயக்கம்
அதை எப்போதும் நினைக்க வைத்தான்

பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

கண் மீது மையெடுத்து தீட்டச் சொன்னான்
நான் தீட்டிக் கொண்டேன்
கணக்காகப் பாட்டொன்று பாடச் சொன்னான்
நான் பாடி வைத்தேன்
செந்தூர இதழ்தனில் ஏதேதோ எழுதி
சிங்காரம் செய்தது புரியவில்லை
அதில் எனக்கும் ஒரு மயக்கம்
அது ஏனென்று தெரியவில்லை

பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

படம் : ஏணிப்படிகள் (1979)
இசை : கே.வி.மஹாதேவன்
வரிகள் : கண்ணதாசன்
பாடகர் : சுசீலா

F : Poonthenil Kalanthu Ponvandu Ezunthu
Sangeetham Padippadhenna
Thalladi Nadappadhenna

Poonthenil Kalanthu Ponvandu Ezunthu
Sangeetham Padippadhenna
Thalladi Nadappadhenna

Ponvanna Eni Ondru Seidhu Koduththan
Enai Valarththu Vittan
Pogadha Mel Padikku Poga Vaiththan
Kalai Malara Seithan 
Avan Nan Vaza Vendumendru Naldhorum Ninaiththan
Nandraga Oridam Thediththanthan
Avan Enaiththan Dhinam Ninaiththan
Nenjil Ennodu Kalanthu Vittan

Poonthenil Kalanthu Ponvandu Ezunthu
Sangeetham Padippadhenna
Thalladi Nadappadhenna


Manikka Mukkuththi Sutti Vittan
Nan Mayangi Ninren
Meenatshi Pola Ennai Jolikka Vaiththan
Manam Malarnthu Nindren
Ther Konda Kaadhaliyai Oorkola Silaiyaai
Theeradha Thirumagal Aakki Vaiththan
Adhil Enakkum Oru Mayakkam
Adhai Eppodhum Ninaikka Vaiththan

Poonthenil Kalanthu Ponvandu Ezunthu
Sangeetham Padippadhenna
Thalladi Nadappadhenna

Kan Meedhu Maiyeduththu Theetta Sonnan
Nan Theettik Konden
Kanakkaga Pattondru Paada Sonnan
Nan Paadi Vaiththen
Senthoora Idhazdhanil Edhedho Ezudhi
Singkaram Seithadhu Puriyavillai
Adhil Enakkum Oru Mayakkam
Adhu Yenendru Theriyavillai

Poonthenil Kalanthu Ponvandu Ezunthu
Sangeetham Padippadhenna
Thalladi Nadappadhenna

Film : Enippadigal (1979)
Composer : K V Mahadevan
Lyrics : Kannadasan
Singer : P Susheela

1 comment:

  1. Super..
    To know about guna movie song Kanmani Anbodu Kadhalan Lyrics Click Here - Kanmani Anbodu Lyrics

    ReplyDelete