Thursday, 13 March 2014

Kannan Oru Kaikkuzhandhai-Badrakaali



பெ: கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்துப் பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ

கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை

ஆ : உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ?

பெ : உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ?

ஆ : ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

பெ : அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்ஆனந்தத்தில் எல்லையது

ஆ : காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா

பெ : கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
ஆ : கன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை

பெ : கையிரண்டில் நானெடுத்துப் பாடுகின்றேன் ஆராரோ
ஆ : மைவிழியே தாலேலோ
பெ : மாதவனே தாலேலோ

பெ : ஆராரிரோ ஆராரிரோ
ஆ : ஆராரிரோ ஆராரிரோ

படம் : பத்ரகாளி (1976)
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
பாடகர் : கே.ஜே.யேசுதாஸ்,பி .சுசீலா

F : Kannan Oru Kaikkuzhandhai Kangal Sollum Poongavidhai
Kannam Sindhum Thaenamudhaik Kondu Sellum En Manadhai
Kaiyirandil Naaneduththu  Paaduginraen Aaraaroa
Maivizhiyae Thaalaeloa Maadhavanae Thaalaeloa

Kannan Oru Kaikkuzhandhai Kangal Sollum Poongavidhai
Kannam Sindhum Thaenamudhaik Kondu Sellum En Manadhai

M : Un Madiyil Naanuranga Kannirendum Thaan Mayanga
Enna Thavam Seydhaenoa Ennavenru Solvaenoa

F : Un Madiyil Naanuranga Kannirendum Thaan Mayanga
Enna Thavam Seydhaenoa Ennavenru Solvaenoa

M : Aezhpirappum Inaindhirukkum Sondhamindha Sondhamammaa
Vaazhvirukkum Naalvaraikkum Thanjam Undhan Nenjamammaa

F : Annamidum Kaigalilae Aadivarum Pillaiyidhu
Unnarugil Naanirundhaal Aanandhaththil Ellaiyadhu

M : Gaayathri Mandhiraththai Uchcharikkum Bakthanammaa
Kaetkum Varam Kidaikkum Varai Kannurakkam
Marandhadhammaa

F : Kannan Oru Kaikkuzhandhai Kangal Sollum Poongavidhai
M : Kannam Sindhum Thaenamudhaik Kondu Sellum En Manadhai
F : Kaiyirandil Naaneduththu  Paaduginraen Aaraaroa
M : Maivizhiyae Thaalaeloa
F : Maadhavanae Thaalaeloa

F : Aaraariroa Aaraariroa
M : Aaraariroa Aaraariroa

Film : Badrakaali (1976)
Composer : Ilayaraja
Lyrics : Vaali
Singers : K.J.Yesudoss,P.Susheela

No comments:

Plz Leave a Comment dude