Thursday 13 March 2014

Punnagai Mannan Poovizhikannan-Iru Kodugal

நவராத்ரியில் கொலு மண்டபத்தில் இவள் பாடலிலே ஒரு
கேள்வி பிறக்கும்
நவராத்ரியில் கொலு மண்டபத்தில் இவள் பாடலிலே பதில்
மறைந்திருக்கும்

புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் ருக்மணிக்காக
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக

புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் ருக்மணிக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக

தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது
திருபரன்குன்றத்திலே

தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது
திருபரன்குன்றதிலே
தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது
திருபரன்குன்றதிலே

மாலையிட்டாள் அது ஒரே முறை தான் என நினைப்பது
பெண்மை அன்றோ
ஒரு மாலையே இரு தோளுக்கு சூடுதல் இறைவன்
தன்மையன்றோ

அது ஏட்டில் உள்ள கதை
இது இன்றும் தொடரும் கதை
அது பொம்மை கல்யாணம்
இது உண்மை கல்யணம் - புன்னகை
மன்னன் பூவிழிகண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே
அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இருவரின்
நெஞ்சினிலே

கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே
அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இருவரின்
நெஞ்சினிலே

ஈர் உயிர் என்றும் ஒரே உடல் தன்னில் இருந்திட வழிஉண்டோ
ஒரு முகத்துக்கு இரண்டு விழிகளை வாய்த்த இயற்கையில்
தவறுண்டோ
இந்த கேள்விக்கு பதில் ஏது
சிலர் வாழ்வுக்கு பொருள் ஏது
அது உறவின் மாறாட்டம்
இது உரிமை போராட்டம்

புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக

புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் ருக்மணிக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக

படம் : இரு கோடுகள் (1969)
இசை : வி. குமார்
வரிகள் : வாலி
பாடகர்கள் : ஜமுனாராணி , பி. சுசீலா

Navarathriyil Golu Mandapathil Ival Paadalile Oru
Kelvi Pirakkum
Navarathril Golu Mandapathil Ival Paadalile Badhil
Maraindhirukkum

Punnagai Mannan Poovizhikannan Rukmanikkaga
Punnagai Mannan Poovizhikannan Rukmanikkaga
Avan Pullanguzhalil Ullam Mayangum Kanmanikkaga
Punnagai Mannan Poovizhikannan Iruvarukkaga
Indha Bhama Rukmani Iruvarume Avan Oruvanukkaga
Punnagai Mannan Poovizhikannan Rukmanikkaga
Indha Bhama Rukmani Iruvarume Avan Oruvanukkaga

Devan Murugan Kovil Kondadhu Valliyin Nenjathile
Avan Dheivanai Endroru Poovaiyai Manandhathu
Thiruparankundrathile
Devan Murugan Kovil Kondadhu Valliyin Nenjathile
Avan Dheivanai Endroru Poovaiyai Manandhathu
Thiruparankundrathile

Maalaiyittal Adhu Ore Murai Dhaan Ena Ninaipadhu
Penmai Andro
Oru Maalaye Iru Tholukku Sooduthal Iraivan
Thanmaiyandro

Adhu Aettill Ulla Kadhai
Idhu Indrum Thodarum Kadhai
Adhu Bommai Kalyanam
Idhu Unmai Kalayanam - Punnagai
Mannan Poovizhikannan Rukmanikkaaga
Avan Pullanguzhalil Ullam Mayangum Kanmanikkaaga

Konjum Kanavan Kungumam Vaipadhu Oruthiyin Netriyile
Andha Kungumam Vaithavan Sangamamaanadhu Iruvarin
Nenjinile
Konjum Kanavan Kungumam Vaipadhu Oruthiyin Netriyile
Andha Kungumam Vaithavan Sangamamanaadhu Iruvarin
Nenjinile

Eer Uyir Endrum Ore Udal Thannil Irundhida Vazhi Undo
Oru Mugathukku Irandu Vizhigalai Vaitha Iyarkayil
Thavarundo
Indha Kelvikku Badhil Aedhu
Silar Vaazhvukku Porul Aedhu
Adhu Uravin Maarattam
Idhu Urimai Poraattam 

Punnagai Mannan Poovizhikannan Rukmanikkaaga
Avan Pullanguzhalil Ullam Mayangum Kanmannikkaaga
Punnagai Mannan Poovizhikannan Iruvarukkaaga
Indha Bhama Rukmani Iruvarume Avan Oruvanukkaaga 

Film : Iru Kodugal (1969)
Composer : V.Kumar
Lyrics : Vaali
Singers : Jamunarani,P.Susheela

No comments:

Plz Leave a Comment dude