ஆ : ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா…ஹோய்
வருவதும் சரிதானோ…உறவும் முறைதானா…
பெ : வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ ஹோ
உலகின் முறையன்றோ..என்றும் நிலையன்றோ
ஆ : வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மீதே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் விழுந்து
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ
ஓடியலைந்து காதலில் விழுந்து
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ
பெ : மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ
ஆ : ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா…ஹோய்
வருவதும் சரிதானோ…உறவும் முறைதானா…
ஆ : பாடும் பறவை கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே
பெ : விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே
ஆ/பெ : ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்
ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்
ஆ : ரோஜா மலரே ராஜகுமாரி
பெ : ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ஆ/பெ : உண்மை இதுவன்றோ ஹோய்
உலகின் முறை அன்றோ
என்றும் நிலை அன்றோ
ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹாஹ்ஹா
ஹா ஹா ஹா ஹாஹா ஹாஹாஹா
படம் : வீரத் திருமகன் (1962)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
M : Roja Malare Rajakumari
Aasai Kiliye Azhagiya Rani
Arugil Varalaamaaaaaa Hoy
Varuvadhum Sari Dhaana
Uravum Murai Dhaana
F : Vaarai Aruge Mannavan Neeye
Kaadhal Ganam Andro
Pedham Ilai Andro
Kaadhal Nilai Andro
Ezhai Endralum Rajakumaran
Raja Magalin Kadhal Thalaivan
Unmai Idhuvandrooo Ho
Ulagin Murai Andro
Endrum Nilai Andro
Oye Oye Ho
Oye Oye Ho
Oye Oye Ho
Ha Ha Ha Ha Ha Ha Ha Ha
M : Vaanathin Meedhu Parandhalum
Kaakai Kiliyaai Maaradhu
Koattayin Maele Nindralum
Ezhayin Perumai Uyaradhu
Odi Alaindhu Kadhalil Kalandhu
Naatai Izhandhavar Palar Andro
Odi Alaindhu Kadhalil Kalandhu
Naatai Izhandhavar Palar Andro
F : Mannavar Naadum Mani Mudiyum
Maaligai Vaazhum Thozhiyarum
Panjanai Sugamum Paal Pazhamum
Padayum Udayum Sevargalum
Ondrai Inayum Kaadhalar Munne
Kaanal Neer Poal Marayadho
Ondrai Inayum Kaadhalar Munne
Kaanal Neer Poal Marayadho
(Roja Malare)
M : Paadum Paravai Koottangale
Pachai Aadai Thoattangale
F : Vinnil Thavazhum Raagangale
Vegam Pogum Megangale
M/F : Oar Vazhi Kandom Oru Manamaanom
Vaazhiya Paadal Paadungalen
Oar Vazhi Kandom Oru Manamaanom
Vaazhiya Paadal Paadungalen
M : Roja Malare Rajakumari
F : Ezhai Endralum Rajakumaran
M/F : Unmai Idhuvandrooo Ho
Ulagin Murai Andro
Endrum Nilai Andro
Film : Veera Thirumagan (1962)
Composer : M.S. Viswanathan,Ramamurthi
Lyrics : Kannadasan
Singers : P.B.Srinivas,P.Susheela
No comments:
Plz Leave a Comment dude