பெ : சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்..
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்..
கிட்ட தட்ட கரைய வைத்தாய்..
கிட்டாமல் அலைய வைத்தாய்..
திட்டாமல் திட்டித்தான் உன் காதல் உணர வைத்தாய்..
ரயில் வரும் பாலமாய்
அய்யோ எந்தன் இதயம்
தடதடதடவென துடிக்க..
நீ ஒருநாள் ஒருநாள் விதையாய் வந்து
விழுந்தாய் கண்ணுக்குள்ளே..
விழிப்பார்க்கும்போதே மரமாய் இன்று
எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே..
அட இனி என்ன நடக்கும்..
மனம் நடந்ததை நடிக்கும்..
ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பார்க்குதே..
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப்பார்க்குதே..
பார்க்குதே.. பார்க்குதே.. தோற்குதே..
ஆ : அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை
மெழுகில் செய்தானடி..
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால்
உருகிட வைத்தானடி..
இந்த மௌனத்தின் மயக்கம்
ரொம்ப பிடிக்குது எனக்கும்..
உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே..
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள் பற்றிக்கொண்டதே..
கொண்டதே.. கொண்டதே.. வென்றதே..
பெ : சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்..
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்..
படம் : எங்கேயும் எப்போதும் (2011)
இசை : சத்யா.சி
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள்: சின்மயி, சத்யா.சி
F : Sotta Sotta Nanaiya Vaithaai
Sollaamal Kothikka Vaithaai..
Yettaatha Idathil Yen Nenjai Parakka Vaithaai..
Kitta Thatta Karaiya Vaithaai..
Kittaamal Alaiya Vaithaai..
Thittaamal Thittithaan Un Kaathal Unara Vaithaai..
Rayil Varum Paalamaai Ayyo Yenthan Ithayam
Thadathatathatavena Thudikka..
Nee Orunaal Orunaal Vithaiyaai Vanthu Vizhunthaai Kannukkulle..
Vizhippaarkumpodhe Maramaai Inru Yezhunthaai Nenjukkulle..
Ata Ini Yenna Nadakkum.. Manam Nadanthathai Nadikkum..
Oru Kuttippoonai Pola Kaathal Yettip Paarkkuthe..
Athu Achsam Madam Naanam Yellaam Thattippaarkkuthe..
Paarkkuthe.. Paarkkuthe.. Thorkuthe..
M : Antha Kadavul Adadaa Aankal Nenjai Mezhukil Seithaanadi..
Athu Ovvoru Nodiyum Pennai Kandaal Urukida Vaithaanadi..
Intha Mounathin Mayakkam, Romba Pidikkuthu Yennakkum..
Un Pechum Moochum Yennai Thaakkivittuch Senrathe..
Nee Vittuchsendra Gnaapakangal Patrikkontadhe..
Kondathe.. Kondathe.. Venrathe..
F : Sotta Sotta Nanaiya Vaithaai
Sollaamal Kothikka Vaithaai..
Yettaatha Idathil Yen Nenjai Parakka Vaithaai..
Film : Engeyum Eppothum (2011)
Composer : Sathya.C
Lyrics : Na. Muthukumar
Singers : Chinmayi, Sathya.C
No comments:
Plz Leave a Comment dude